லண்டனில் உள்ள பிரபல ஆடம்பர தங்கும் விடுதிகளில் ஒன்று கிளாரிட்ஜ் ஹோட்டல். அந்த ஹோட்டல் 2017ஆம் ஆண்டு நவம்பரில் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்தபோது நியூசிலாந்தைச் சேர்ந்த ராமன் சேதி என்ற சீக்கியரும் அந்த வேலைக்கு முயன்றுள்ளார்.
தனியார் ஆட்சேர்ப்பு ஏஜென்சி நடத்திய நேர்முகத்தில், தலையில் டர்பனும் முகத்தில் தாடியுமாக பங்கேற்ற ராமன் சேதிக்கு வேலை கொடுக்க முடியாது என மறுத்துள்ளனர். நீளமான தலை முடியோ, தாடியோ வைத்திருப்போருக்கு வேலை கிடையாது என்பது தங்கள் கொள்கை என்றும் கூறியுள்ளனர்.
34 வயதாகும் ராமன் சேதி இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், நீதிபதி ஹோட்டல் நிர்வாகத்தின் கொள்கையைக் கடுமையாகக் கண்டித்தார்.
லண்டனில் தாடி வைத்திருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு