பூவுலகின் வரலாற்றில் இதுதான் மிக வெப்பமான ஆண்டு!

வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கடந்த ஆண்டே உச்சத்தை எட்டியது. தொடர்ந்து அதிகரித்தபடியே வந்திருக்கிறது. கடல் நீரில் அமிலங்களின் அளவு 26 சதவீதம் அதிகமாகிவிட்டது.


ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இரண்டு வாரங்கள் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்ற உடன்படிக்கை தொடர்பான விதிமுறைகள குறித்து விவாதிக்கப்படுகிறது. 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆய்வு முடிவுகளை உலக வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது. இதனை அந்த மையத்தின் பொதுச் செயலாளர் பெட்டேரி டாலஸ் வெளியிட்டார்.

அப்போது, பேசிய அவர் “பகாமாஸ் முதல் ஜப்பான், மொசாம்பிக் வரை பல நாடுகளை புயல்கள் சூறையாடியுள்ளன. ஆர்டிக் பிரதேசத்திலும் ஆஸ்திரேலியாவிலும் காட்டுத்தீ வளங்களை அழித்துள்ளது” எனக் கூறினார்.