புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன். ரசிகர்கள் மற்றும் சக வீரர்களால் செல்லாமாக கப்பர் என அழைக்கப்படும் தவன், இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகள், 133 ஒருநாள், 58 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
குவியும் வாழ்த்து
இதற்கிடையில் தவன் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். டெல்லியில் உள்ள செயிண்ட் மார்க்ஸ் சீனியர் பள்ளியில் படித்த தவன் தனது 12வது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். கடந்த 2010இல் இந்திய அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார் தவன்