இந்திய அணிக்கு கிடைத்த கேப்டன்களில் யார் மிகச்சிறந்த கேப்டன் யார் என இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த கேப்டன்களில் கபில் தேவ் முதல் தோனி வரை பல கேப்டன்கள் இருந்துள்ளனர். தற்போது இந்த பட்டியலில் இளம் விராட் கோலி பல சாதனைகளை உடைத்து வேகமாக நெருங்கி வருகிறார்.
ஆனால் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின் இந்திய கிரிக்கெட் அணியால் இதுவரை ஒரு ஐசிசி தொடரிலும் கோப்பை வெல்ல முடியவில்லை.
கொண்டாடும் ரசிகர்கள்
இந்நிலையில் ஐசிசி நடத்தும் மூன்று உலகக்கோப்பையை (டி-20 உலகக்கோப்பை (2007), 50 ஓவர் உலகக்கோப்பை (2011), மினி உலகக்கோப்பை (2013)) இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்த கேப்டன் தோனியை ரசிகர்கள் இதுவரை கிடைத்த கேப்டன்களிலேயே மிகச்சிறந்த கேப்டன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.